×

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: வானில் என்ன நடக்கிறது? என்பதை காண மெக்சிகோவில் குவிந்த மக்கள்!!

மெக்சிகோ: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை காண மெக்சிகோவில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூமிக்கு சூரியனுக்கும் இடையே சந்திரன் பயணிப்பதையே சூரிய கிரகணம் என்கிறோம். இந்த சூரிய கிரகணத்தின் போது பூமியில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சந்திரன் இருக்கும் என்றும், சந்திரனுக்கும் பூமிக்கும் மிக நெருக்கமான தூரம் என்பதால் வழக்கத்தை விட வானத்தில் சூரிய கிரகணம் பெரியதாக தோன்றும் எனவும் கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தை போல் இன்னொரு சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை நிகழாது என கூறப்படுகிறது.

இந்திய நேரப்படி இரவு 09.13 மணி முதல் இன்று அதிகாலை 2.22 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் சூரிய கிரகணத்தை காண முடியாது. அதே சமயம் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளில் சூரிய கிரகணத்தை காண முடியும். சுமார் 4 நிமிடங்களுக்கு நிகழும் முழுமையான சூரிய கிரகணத்தை டெலஸ்க்கோப் உதவியுடன் காண மெக்சிகோ பிளானிட்டோரியத்தில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டது. சூரிய கிரகணத்தை காண ஏராளமானோர் முன்பதிவு செய்த நிலையில் சூரிய கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர்.

The post இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: வானில் என்ன நடக்கிறது? என்பதை காண மெக்சிகோவில் குவிந்த மக்கள்!! appeared first on Dinakaran.

Tags : First Solar Eclipse of the Year ,Mexico ,eclipse of the ,earth ,sun ,of the year ,
× RELATED இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்