×

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்தது

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தன. இந்த தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது.

இது தவிர விருப்ப மொழிப்பாடங்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 28,800 பேரும் பங்கேற்றனர். நேற்றுடன் தேர்வு முடிந்ததை அடுத்து, விடைத்தாள்களை 118 மையங்களில் சேகரித்து, 88 மையங்களில் விடைத்தாள் திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் 1ம் தேதி 17,803 பேரும், 4ம் தேதி 17,301 பேரும், 8ம் தேதி 17,309 பேரும் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Electoral Department ,TAMIL NADU ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...