×

காங்கிரஸ் வேட்பாளர்களிடம் டீ வாங்கவும் காசு இல்லை: பாஜவினரிடம் கோடி கோடியாக பணம்பாஜவினரிடம் கோடி கோடியாக பணம்; செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டார். இதனை மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் பெற்றுக் கொண்டார். துணைத் தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், எம்.ஏ.முத்தழகன், டெல்லிபாபு, கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: 2 தினங்களுக்கு முன் 4 கோடி ரூபாய் பணம் எடுத்துள்ளனர். இதை ஒரு எதிர்க்கட்சி, மாநில கட்சி வேட்பாளரிடம் இருந்து எடுத்து இருந்தால் இந்நேரம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ என்று வரிந்து கட்டி பாய்ந்து இருப்பார்கள். இதுவரைக்கும் மோடியும், நிர்மலா சீதாராமனும் மவுனமாக இருப்பதற்கு என்ன காரணம். பட்டவெளிச்சமாக தெரிகிறது. அவர்களுக்கு என்றால் எதுவும் கிடையாது. அமலாக்கதுறை, சிபிஐ. வருமானவரித்துறை வழக்கு எல்லாம் பாஜஅல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் மீது போடுவார்கள். காங்கிரஸ் மீது போடுவார்கள்.

ஆனால், இதுவரை பாஜ அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், இப்போது தேர்தலில் நிற்கும் பாஜவேட்பாளர்கள் மீது ஏன் பாயமாட்டேன்கிறது. இது தான் கேள்வி. அப்போ பாசிச ஆட்சி நடக்கிறது என்பதற்கு இது எல்லாம் மிகப்பெரிய முன் உதாரணம். ஒரு சின்ன பிரச்னை என்றால் வரிஞ்சிக்கட்டிக்கொண்டு போகும் அமலாக்க துறை, சிபிஐ, வருமானவரித்துறை 3 நாட்கள் ஆக போகிறது ஏன் மவுனியாக இருக்கிறார்கள். என்ன காரணம். இது தான் பாஜமாடல் ஆட்சி. வெகுவிரைவில் இந்த ஆட்சிக்கு மக்கள் விடைகொடுக்க போகிறார்கள்.

பிடிபட்ட 4 கோடி திருப்பி கொடுக்கப்படும். வழக்கும் இருக்காது. அமலாக்கத்துறையும் போகாது. வருமானவரித்துறையும் போகாது. சிபிஐ வேடிக்கை பார்க்கும். ஏன் என்றால் அவர் பாஜ வேட்பாளர். இது தான் மோடி மாடல் ஆட்சி. தமிழகத்தில் பெரிய மாற்றம் இருக்கிறது. பெரிய எழுச்சியிருக்கிறது. நோட்டோவுக்கு கீழே அவரை அனுப்புறதுக்கு. நோட்டோக்கு மேலே வர முயற்சிக்கணும். காங்கிரசிடம் பணமே கிடையாது. பணமே இல்லைங்க. டீ வாங்கி கொடுக்க காசு இல்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள், எங்க இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர்கள், மதிமுக, விசிகவினர் போட்டியிடுகிறார்கள். அங்கே எங்கேயாவது 4 கோடி பணம் எடுத்து இருக்கிறார்களா?. 4 கோடி எடுத்தவர்களிடம் தான் பணம் இருக்கிறது. எங்களிடம் பணமே கிடையாது. குடிக்க டீ கிடையாது. தண்ணீர் குடித்து கொண்டு வேலை செய்கிறோம். நிர்மலா சீதாராமன் மாதிரி பொய் எல்லாம் சொல்ல மாட்டோம்.

The post காங்கிரஸ் வேட்பாளர்களிடம் டீ வாங்கவும் காசு இல்லை: பாஜவினரிடம் கோடி கோடியாக பணம்பாஜவினரிடம் கோடி கோடியாக பணம்; செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,All India Congress Party ,Tamil Nadu ,president ,Selvaperunthakai ,Satyamurthy ,Bhavan ,Chennai ,Ajoy Kumar ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...