×

ஒன்றிய அரசு அதிரடி: ஐதராபாத் பாஜ வேட்பாளருக்கு கமாண்டோ படை பாதுகாப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அவருக்கு ஆயுதமேந்திய கமாண்டோக்களின் விஐபி பாதுகாப்பை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. பா.ஜ வேட்பாளர் மாதவி லதாவுக்கு ‘ஒய் பிளஸ்’ வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஐதராபாத் மக்களவைக்கு மே 13ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவருமான அசாதுதீன் ஒவைசியை எதிர்த்து மாதவி லதா போட்டியிட உள்ளார். இதனால் அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் ஆயுதம் ஏந்திய 5 வீரர்கள் 24 மணி நேரமும் லதாவுடன் இருப்பார்கள்.

The post ஒன்றிய அரசு அதிரடி: ஐதராபாத் பாஜ வேட்பாளருக்கு கமாண்டோ படை பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Hyderabad ,BJP ,New Delhi ,Madhavi Lata ,Lok Sabha elections ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...