×

அமைச்சர் மீது செருப்பு வீச்சு புதுசு இல்ல… பழசு… குஜராத்தில் பாஜ கதறல்

போர்பந்தர்: குஜராத்தில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மீது ஒருவர் செருப்பு வீசும் பழைய வீடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜ புகாரளித்துள்ளது. பாஜவின் கோட்டையான குஜராத்திலேயே அக்கட்சி தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. ராஜ்கோட் தொகுதி வேட்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பர்சோத்தம் ரூபாலா சமீபத்தில் மகாராஜாக்கள் பற்றி தாறுமாறாக பேசியதால் ராஜ்புத் வம்சத்தினரின் ஆத்திரத்திற்கு ஆளாகி உள்ளார். பர்சோத்தம் ரூபாலாவை நீக்கக் கோரி தீக்குளிப்பு போராட்டம் நடத்தவும் ராஜ்புத் பிரிவினர் தயாராகி விட்டனர்.

இந்த விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மீது ஷூ வீசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி பாஜவை கதற வைத்துள்ளது. போர்பந்தர் தொகுதி பாஜ வேட்பாளராக மாண்டவியா போட்டியிடுகிறார். இந்நிலையில் இந்த வீடியோ 6 ஆண்டுக்கு முன் நடந்த பழைய விவகாரம் என்றும், தேர்தலில் ஆதாயம் தேடவும் சிலர் திட்டமிட்டு பழைய வீடியோவை பரப்புவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திடம் பாஜ புகார் செய்துள்ளது.

The post அமைச்சர் மீது செருப்பு வீச்சு புதுசு இல்ல… பழசு… குஜராத்தில் பாஜ கதறல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Gujarat ,Porbandar ,Election Commission ,Union Minister ,Mansukh Mandaviya ,Rajkot Constituency ,
× RELATED குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.602...