×

பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு: நடிகர் சிரஞ்சீவி ரூ.5 கோடி நன்கொடை

திருமலை: நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார். ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் ஜனசேனா கட்சி பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 21 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளது. ஜனசேனா கட்சி ஆரம்பித்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தனது அண்ணனும் பிரபல நடிகருமான சிரஞ்சீவியின் ஆசீர்வாதத்திற்காக பவன் கல்யாண் காத்திருந்தார். இந்நிலையில் சீரஞ்சிவி தனது தம்பிகளான பவன் கல்யாண், நாகபாபுவை ஐதராபாத் வரும்படி அழைத்தார். ஐதாராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலில் விஸ்வம்பரா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சீரஞ்சிவியை இருவரும் சந்தித்தனர். இந்நிலையில் அண்ணனே அழைத்து ஆசிர்வதித்ததால் புது உற்சாகம் அடைந்தார். அதன் பிறகு 3 சகோதரர்களும் சிறிது நேரம் உரையாடினர். பின்னர் ஜனசேனா கட்சியின் தேர்தல் செலவுக்காக ரூ.5 கோடி நன்கொடையாக சிரஞ்சீவி வழங்கினார்.

The post பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு: நடிகர் சிரஞ்சீவி ரூ.5 கோடி நன்கொடை appeared first on Dinakaran.

Tags : Pawan Kalyan ,Janasena Party ,Chiranjeevi ,Tirumala ,Andhra ,BJP ,Telugu Desam Party ,Lok Sabha ,
× RELATED பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்;...