×

இந்தியக்கொடியை அவமதித்த மாலத்தீவு மாஜி அமைச்சர் சர்ச்சையானதால் மன்னிப்பு கோரினார்

மாலே: மாலத்தீவு இளைஞர் நலத்துறை துணை அமைச்சராக இருந்தவர் மரியம் ஷியூனா. கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மாலத்தீவு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் போது இந்திய கொடியின் அசோக சக்கரத்தின் படத்தை பதிவிட்டு அவதூறு செய்தார். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அவர் உடனே மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,’ சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவால் ஏற்பட்ட குழப்பம் அல்லது குற்றத்திற்காக எனது உண்மையான மன்னிப்பைக் கோருகிறேன். மாலத்தீவின் எதிர்க் கட்சியான எம்.டி.பி.க்கு நான் அளித்த எனது பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியுடன் ஒத்திருந்தது என்பது எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன். ’ என்று குறிப்பிட்டுள்ளர்.

The post இந்தியக்கொடியை அவமதித்த மாலத்தீவு மாஜி அமைச்சர் சர்ச்சையானதால் மன்னிப்பு கோரினார் appeared first on Dinakaran.

Tags : Maldives ,Malé ,Mariam Shiuna ,Deputy Minister of Youth Affairs ,Modi ,Ashoka Chakra ,opposition Democratic Party ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...