×

தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில் தவறிவிழுந்த யானை உயிருக்கு போராட்டம்: மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில் தவறி விழுந்த பெண் யானை உயிருக்கு போராடி வருகிறது. மருத்துவக்குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது கடம்பூர் மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைகின்றன. இந்நிலையில், குரும்பூர் வனப்பகுதியில் இருந்து நேற்று வெளியே வந்த பெண் யானை, கடும் வெயிலில் தண்ணீர் தேடி அலைந்தது.

அப்போது பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தில் தண்ணீர் இருப்பதை கண்டு யானை அங்குள்ள குழியில் இருந்து மேலே ஏறும்போது தவறிவிழுந்து காயமடைந்தது. அதனால் எழ முடியாமல் தவித்தது. சுட்டெரிக்கும் வெயிலில் தற்போது இந்த யானை உயிருக்கு போராடி வருகிறது. குரும்பூர் மலைப்பகுதி மக்கள் மூலம் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவயிடம் வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் விழுந்துகிடக்கும் யானையை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவயிடம் வந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில் தவறிவிழுந்த யானை உயிருக்கு போராட்டம்: மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Kadampur ,Sathyamangalam, Erode district.… ,Dinakaran ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு