- ராமேஸ்வரம்
- அக்னி தீர்த்தம்
- பங்கூனி
- அமாவாசை
- தீர்த்த கடல
- அக்னி தீர்த்த ஏரி
- ராமநாதபுரம் மாவட்டம்
- அமாவாசி
ராமேஸ்வரம்: பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் மாதந்தோறும் அமாவாசையன்று பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். இதன்படி, பங்குனி மாத அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை முதல் கடலில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதை தொடர்ந்து ராமநாதசுவாமி கோயில் உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகளவில் கூடியதால் கிழக்கு நுழைவாயிலில் கோயில் ஊழியர்கள் மற்றும் காவலர்கள் பொது தரிசனம் செல்பவர்களை வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
The post பங்குனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல் appeared first on Dinakaran.