×

உதகை அருகே மசினகுடி பகுதியில் பயங்கர காட்டுத் தீ: வனப்பகுதியில் மூங்கில் மரங்களில் தீப்பற்றியதால் பரபரப்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தினால் கடும் வறட்சியானது நிலவி வருகிறது. குறிப்பாக முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சியின் காரணமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் கடும் வறட்சி ஏற்பட்டு காட்டு தீ கடந்த சில நாட்களாக அங்கங்கே ஏற்பட்டது. இந்த நிலையில் நின்றைய தினம் மசினகுடி அருகே இருக்கக்கூடிய வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். அவர்கள் வைத்த தீ மூங்கில் மரங்கள் எறிந்த நிலையில் அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்கும் மளமளவென பரவி அங்கே இருக்கக்கூடிய வனப்பகுதி முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.

அந்த வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தனியார் தாங்கும் விடுதி அமைத்திருந்த மாற வீடும் பற்றி எரிந்து சேதமடைந்தது. அந்த மாற வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில் தற்போது காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வரும் நிலையில் தற்போது தீயை அணைப்பதற்காக கூடலூரில் இருக்கக்கூடிய தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post உதகை அருகே மசினகுடி பகுதியில் பயங்கர காட்டுத் தீ: வனப்பகுதியில் மூங்கில் மரங்களில் தீப்பற்றியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Masinagudi ,Utkai ,Nilgiri district ,Mudumalai ,Masinakudi ,Utagai ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி...