×

காட்டைக் காத்த வீரப்பன் மகள் நாட்டைக் காக்க போராடுவாள்; கிருஷ்ணகிரியில் சீமான் நம்பிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் சீமான் நேற்று மாலை பேசியதாவது: வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்நாட்டில் இருந்து பெண்களை அழைத்துச் சென்று கர்நாடகா மாநில போலீசார் சித்ரவதை செய்திருக்க முடியுமா? வீரப்பன் காட்டிற்குள் இருக்கும்போது, ஒரு நாள் நான் காட்டில் இருந்து வெளியே வந்து தேர்தலில் நிற்பேன், என் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். நானும் ஒரு நாள் அதிகாரத்திற்கு வருவேன் என தெரிவித்தார்.

அவர் வரவில்லை. ஆனால், அவரது அரசியல் வாரிசாக வித்யாராணி வீரப்பனை களத்தில் நிற்க வைத்துள்ளேன். காட்டை காத்த மாவீரனின் மகள், இந்த நாட்டை காக்க போராடுவாள் என்கிற உறுதியை நான் உங்களுக்கு தருகிறேன். காட்டிற்குள் வாழ்ந்த வீரப்பன், நாகப்பாவை கடத்தினார். அவர் நினைத்திருந்தால் நமீதாவை கடத்தியிருக்க முடியாதா?. ஒரு நொடி நினைத்து பாருங்கள், காட்டிற்குள் வீரப்பன் இருந்திருந்தால், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என கூற முடியுமா? இவ்வாறு சீமான் பேசினார்.

The post காட்டைக் காத்த வீரப்பன் மகள் நாட்டைக் காக்க போராடுவாள்; கிருஷ்ணகிரியில் சீமான் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Veerappan ,Seaman ,Krishnagiri ,Vidyarani Veerappan ,Nam Tamil Party ,Seeman ,Karnataka ,Tamil Nadu ,
× RELATED வீரப்பன் மகளுடன் பாமகவினர் வாக்குவாதம்