- ஐரோப்பிய ஒன்றிய
- பாஜக
- திரிணாமுல் காங்கிரஸ்
- தில்லி
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- Tarna
- ஜனாதிபதி தேர்தல் ஆணையம்
- திரிணாமுல்
- மூத்த
- டெரிக் ஓ'பிரையன் தலைமை தாங்கியது
- எம். ஆ.
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- திரிணாமூல் காங்கிரஸ்
- தின மலர்
டெல்லி : டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.இந்த நிலையில், திரிணாமுல் காங். எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீஸ் கைது செய்தது. திரிணாமுல் காங். எம்.பி. சாகேத் கோகலேவை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது போலீஸ்.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து திரிணாமுல் காங். கட்சி பிரதிநிதிகள் சில முறையீடுகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,”தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையர்களிடம் வலியுறுத்தினோம். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் மக்களவைத் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற திரிணாமுல் காங். கோரிக்கை வைத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின்றி என்.ஐ.ஏ. தலைவரை நியமித்தது விதிமீறல் என்றும் குற்றம் சாட்டியுள்ளோம். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஒன்றிய விசாரணை அமைப்புகளை பாஜக முகவர்கள் போல மோடி அரசு பயன்படுத்தி வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்!! appeared first on Dinakaran.