×

ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து திருவாரூர் பிரச்சாரத்தில் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு : பாஜக நிர்வாகிகள் ஏமாற்றம்!!

சென்னை : திருவாரூரில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டமே இல்லாததால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் தேசிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தேசிய பாஜக தலைவர் நட்டாவைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் இன்று தமிழகம் வந்துள்ளார்.

இந்த நிலையில், திருவாரூர் பிரச்சாரத்தில் மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடியதால் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். நாகை பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷை ஆதரித்து ராஜ்நாத் சிங் தாமரை சின்னத்திற்கு பிரச்சாரம் செய்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர். கூட்டத்தில் ராஜ்நாத் சிங் ஹந்தியில் பேசியதால் மக்களுக்கு புரியாமல் எழுந்து சென்றனர். இதனால் பல பகுதியில் சேர்கள் காலியாக கிடந்தது. கட்சி நிர்வாகிகள் தடுத்தும் மக்கள் அதை கேட்காமல் கலைந்து சென்றனர்.

காலி சேர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அரியலூர், கரூர், திருச்சியில் நட்டாவின் பிரச்சாரத்தில் கூட்டம் சேராத நிலையில் திருவாரூரிலும் மக்கள் திரளாததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் நிலையிலும் பிரச்சாரத்தில் கூட்டம் சேராததால் பாஜக நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

The post ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து திருவாரூர் பிரச்சாரத்தில் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு : பாஜக நிர்வாகிகள் ஏமாற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Union minister ,Rajnath Singh ,Tiruvarur ,JP ,BJP ,Chennai ,Tamil Nadu ,Puducherry ,Thiruvarur ,JP Natta ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...