×

தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பம்

சென்னை: தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளன. இதனால் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர வாய்ப்பு அதிகாறித்துள்ளது. மாற்றப்படும் புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

உயர்கல்வியை பொறுத்தவரை மருத்துவம், கலை மற்றும் அறிவியல், துணை மருத்துவ படிப்புகள் உள்ளிட்ட கல்வியியல் படிப்புகளுக்கெல்லாம் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டுள்ளது. அங்கத குழுவின் தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி தலைவராக உள்ளார்.

இந்த குழு 3 வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை பெற்றுள்ளது. அதன்படி பிஇ, பிடெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கும், 17 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கும் மற்றும் பிஎட், எம்எட் படிப்புகளுக்கான கட்டணங்கள். இந்த படிப்புகளை நடத்தக்கூடிய நடத்தும் கல்லூரி நிர்வாகங்களிடமிருந்து மார்ச் மாதம் 11ம் தேதிக்குள்ளாக விண்ணப்பங்களை பெற்றுள்ளன.

மூன்று தனியார் கல்லூரிகள் அதிகளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள. பொறியியல் படிப்புகளை நடத்தி வரும் தனியார் கல்லூரிகள் 25% வரை கட்டணம் உயர்த்த வேண்டும் என விண்ணப்பத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை பெரியளவிற்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை அதனால் இந்த முறை உயர்த்த வேண்டும் என அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட உள்ள கட்டண அறிவிப்பு 2026-27 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50,000 எனவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன.

The post தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Fee Fixing Committee ,CHENNAI ,Fee Fixation Committee ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...