×

உகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை: உகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட உகாதி பண்டிகை வாழ்த்துக்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபட இந்நாளில் உறுதியேற்போம் என ராமதாஸ் கூறியுள்ளார். உகாதி தினத்தில் மகிழ்ச்சி, அமைதி, இன்பம், வளமை அனைத்தும் நிறைய வாழ்த்துகள் என அன்புமணி தெரிவித்திருக்கிறார். உகாதி திருநாள் தமிழக மக்களின் ஒற்றுமையும், நட்புணர்வும் தொடரும் ஆண்டாக அமையட்டும் என டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.

The post உகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Ugadi ,Chennai ,Selvaperunthagai ,Tamil Nadu ,
× RELATED தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு...