×

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் எஞ்சின் மூடி கழன்று விழுந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் எஞ்சின் மூடி கழன்று இறக்கை மீது விழுந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் கொலாராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போயிங் 737-800 வகை விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.15-க்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் ஹஸ்டனுக்கு புறப்பட்டது.

ஓடுபாதையில் இருந்து விமானம் உயரே எழுந்த சில நொடிகளில் எஞ்சின் மூடி கழன்று விமான இறக்கை மீது பலத்த சத்தத்துடன் விழுந்தது. எஞ்சின் மூடி கழன்று விழுந்த சப்தம் கேட்டவுடன் விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். மேலும் விமானப் பயணிகள் அனைவரும் வேறொரு விமானத்தில் ஹூஸ்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. விமான எஞ்சின் மூடி கழன்று விழுந்தது குறித்து அமெரிக்க பயணிகள் விமான நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் எஞ்சின் மூடி கழன்று விழுந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : US ,WASHINGTON ,Denver International Airport ,Colorado, USA ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...