சென்னை: தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அகோரம் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்த புகாரில் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரத்துக்கு ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை மறுப்பு தெரிவித்திருக்கிறது.
The post தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அகோரம் ஜாமின் கோரி மனு..!! appeared first on Dinakaran.