×

சங்கரன்கோவிலில் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஐடி, ஈ.டி, சிபிஐ மூன்றை வைத்து தான் பாரதிய ஜனதா ஆட்சி நடத்துகிறது

*அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

சங்கரன்கோவில் : சாதி, மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தி வரும் பாஜ அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராணி குமாரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் வைத்து நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார்.

சதன் திருமலை குமார் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் இன்பா ரகு, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, யாதவ மகாசபை சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், கூட்டணி கட்சியை மதிக்கின்ற ஒரே இயக்கம் திமுக என்பதை கூட்டணிக் கட்சியினர் நன்கு உணர்வார்கள். பாஜ ஐடி, ஈ.டி, சிபிஐ இந்த மூன்றை வைத்துத்தான் ஆட்சி நடத்துகிறது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜ நம்மைப் பிரிக்க நினைக்கிறது. திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 5497 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த அரசு எப்படி இந்துக்களுக்கு விரோதமாக இருக்கமுடியும். இந்துக்களுக்கு விரோதி என பாஜ பொய் சொல்கிறது. இதுவரை திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை 1 கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்ததும் மற்ற மகளிர் அனைவருக்கும் உதவித் தொகையை முதல்வர் வழங்குவார். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் மு.க.ஸ்டாலின்தான். பிரதமர் மோடி அதிபர் ஆட்சி கொண்டு வர முயற்சிக்கிறார். நிரந்தர பிரதமராக இருக்க நினைக்கிறார்’ என்றார்.

கூட்டத்தில் யாதவ சங்க செயலாளர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், மாரிச்செல்வி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் குருவசந்த், மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன், இணையதள அணி பொறுப்பாளர் குமார், விவசாய தொழிலாளர் அணி முருகராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், நகர மாணவரணி வெங்கடேஷ், மாவட்ட பொறியாளர் அணி பிரவின், மாவட்ட விவசாய அணி கருப்பசாமி, மங்கலா துரை, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் கார்த்தி, மணிகண்டன், ராஜ், ராஜராஜன், சரவணன், கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மதிமுக சுதா பாலசுப்பிரமணியன்,

மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகசாமி, காங்கிரஸ் நகர தலைவர் உமாசங்கர், விசிக லிங்க வளவன், சிபிஎம் முத்துப்பாண்டி, சிபிஐ இசக்கிதுரை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பட்டாணி, தமுமுக யாஹூப், ஆதிதமிழர் கட்சி ஆதவன், ஆதித்தமிழர் பேரவை தென்னரசு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சுப்பிரமணியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கணேசன், திராவிட தமிழர் கட்சி மகாலிங்கம், தமிழ் புலிகள் கட்சி சந்திரசேகர், மனிதநேய ஜனநாயக கட்சி அஜ்மீர், மக்கள் நீதி மையம் அய்யாசாமி, குருசாமி யாதவ் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் யோகேஷ் குமார், ராஜேஷ், பிரம்மன்கணேசன், மோகன், வினோத், வாடி கோட்டை முருகன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவிலில் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஐடி, ஈ.டி, சிபிஐ மூன்றை வைத்து தான் பாரதிய ஜனதா ஆட்சி நடத்துகிறது appeared first on Dinakaran.

Tags : Bharatiya Janata Party ,ET ,CBI ,Rani Sreekumar ,Shankaran Temple ,Minister ,Rajakannappan ,Sankaranko ,BJP government ,Tenkasi Lok Sabha Constituency ,DMK ,Rani Kumar ,Sankaran ,Temple ,IT ,Dinakaran ,
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...