×

மயிலாடுதுறை நகரில் இருந்து நகர்ந்து 22 கி.மீ. தொலைவில் முகாமிட்டுள்ள சிறுத்தை: 6வது நாளாக தேடும் பணி தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 6வது நாளாக நீடிக்கிறது. மயிலாடுதுறை நகரில் இருந்து நகர்ந்து 22 கி.மீ. தொலைவில் சிறுத்தை முகாமிட்டுள்ளது. காஞ்சிவாய் என்ற இடத்தில் சிறுத்தை தென்பட்டதால் அங்கு வனத்துறையினர் தேடி வருகின்றனர். சிறுத்தை கால் தடத்தை கண்டறிவதில் நிபுணர்களான பொம்மன், காலனுடன் இணைந்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறையில் கடந்த 2ம் தேதி தென்பட்ட சிறுத்தை மயிலாடுதுறையை சுற்றியுள்ள சுமார் 3 கி.மீ. சுற்றளவில் தொடந்து சுற்றி வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகினர். இதனையடுத்து சிறுத்தை நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கி.மீ. பயணித்து குத்தாலம் பகுதியில் உள்ள காஞ்சிவாய் என்ற கிராமத்தில் பதுங்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்நாடு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் காஞ்சிவாய் பகுதியிலிருந்து 2 கி.மீ. உள்ள கிராமத்தில் சிறுத்தை தெப்பட்டதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர். சிறுத்தை கால் தடத்தை கண்டறிவதில் நிபுணர்களான பொம்மன், காலனுடன் இணைந்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post மயிலாடுதுறை நகரில் இருந்து நகர்ந்து 22 கி.மீ. தொலைவில் முகாமிட்டுள்ள சிறுத்தை: 6வது நாளாக தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Kanchiwai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...