வாஷிங்டன்: இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. இது நிலவு முழுமையாக சூரியனை மறைக்கும் முழு சூரிய கிரகணம் என்பதால் அரிதானதாக கருதப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் நிலவு குறுக்கிட்டு சூரியனை மறைப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணம் அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது.
ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது எனவும் அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் மட்டுமே தெரியும் எனவும் நாசா அறிவித்துள்ளது. ஸ்பெயின், பிரிட்டன், ஐயர்லாந்து, போர்ச்சுகல், ஐஸ்லாந்து ஆகிய ஆண்டுகளில் சூரிய கிரகணத்தில் ஒரு பகுதியை காண முடியும். சூரிய கிரகங்களின் முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம் என நன்கு வகைகள் உள்ளன. இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே இன்று நிகழ உள்ளது. இதனை காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே லட்சக்கணக்கானோர் இன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
The post இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்வு: நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கூடும் மக்கள் appeared first on Dinakaran.