×

எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிடுச்சு: வேட்பாளர காணோம் தேடும் தொண்டர்கள்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் களம் காணாதது அரசியல் பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் ‘எங்கப்பா நம்ம வேட்பாளர காணோம்’ என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் சுறுசுறுப்பின்றி உள்ளார். அதிமுக கட்சியின் தொண்டர்களோ, செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் சந்திரமோகனை பார்த்தோம். அதன் பின்னர் நம்ம வேட்பாளர் எங்கேயும் பார்க்க முடியலையேப்பா என புலம்பி வருவதை கண்கூடாகவும்… காது கொடுத்தும் கேட்க முடிகிறது. ‘எப்படி இருந்த நம்ம கட்சி இப்படி ஆகிவிட்டதே’ என அதிமுக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுவது அல்லது கட்சித் தொண்டர்களுடன் களப்பணியாற்றுவது என எதையும் மேற்கொள்ளாமல் அசட்டையாக அதிமுக வேட்பாளர் இருப்பதாக அதிமுகவினரே புலம்புகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி, துறையூர் உட்பட நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பிற இடங்களிலும் தேடினாலும் காணக்கிடைக்காத வேட்பாளராகவே அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் களத்தில் உள்ளார்.

சரிங்க… அதிமுக வேட்பாளர்தான் நேரில் வரல… துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கி பிரசாரம் என ஏதேனும் ஒரு வேலையை செய்ய கொடுங்கப்பா என கட்சியின் தீவிர விசுவாசிகள் ஏக்கத்தோடு அதிமுக நிர்வாகிகளை கேட்டு வருகின்றனர். மாற்றுக் கட்சியினரும், பொது மக்களும் தேர்தல் முடியறதுக்குள்ள உங்க வேட்பாளர் ஓட்டு கேட்டு வந்து விடுவாரா என கேட்டு நகைப்பது அதிமுகவினருக்கு பெரும் சங்கட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிடுச்சு: வேட்பாளர காணோம் தேடும் தொண்டர்கள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Perambalur ,Thadharyur ,Musiri ,Mannachanallur ,Lalgudi ,Kulithlai ,Chandramohan ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை