- இந்தியா
- பாஜா
- ஜனாதிபதி
- உலகத் தமிழ் கூட்டமைப்பு
- தமிழ் தேசிய முன்னணி நிர்வாகக்
- தஞ்சாவூர்
- பதா
- தமிழ் தேசிய முன்னணி நிறுவனம்
- உலக தமிழ் புரட்சி
- பஜாஜ்
- 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள்
- இந்தியா கூட்டணி
- பாஹா கூட்டணி
- உலகத் தமிழ் எக்குமுலேஷன்
தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணி தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாசிச பாஜ வெற்றி பெற்று விடுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டில் நிலவாது. பாசிச சர்வாதிகார, இந்துத்துவா ஆட்சி நிலை நிறுத்தப்படும்.
மதச்சிறுபான்மையினர் மற்றும் உள்ள பொது சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள். சமஸ்கிருத மொழியும், பண்பாடும், திணிக்கப்படும். மனித உரிமைகள் துச்சமாக மதிக்கப்பட்டு தூக்கி எறியப்படும். ஒட்டுமொத்தமாக நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்படக்கூடிய பேராபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு பாஜ கூட்டணி அடியோடு முறியடிக்கப்பட வேண்டும். அதற்குரிய வலிமையும், தற்போதைய சூழ்நிலையும் இந்தியா கூட்டணி தவிர வேறு எந்த அணிக்கும் இல்லை என்பது உண்மை ஆகும்.
எனவே அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்குமாறு மக்களுக்கு தமிழர் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் முத்தமிழ்மணி, பொதுச்செயலாளர்கள் தமிழ்மணி, பசுமலை, துணை தலைவர்கள் முருகேசன், பானுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post பாஜ கூட்டணியை முறியடிக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு: உலக தமிழர் பேரமைப்பு தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.