×

பள்ளி மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கி ஆணையை எதிர்த்து மேல்முறையீடு: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில், வேலையிழப்பு ஏற்பட்ட நிலையிலும், தனியார் பள்ளிகளில் பயிலும் தங்களது குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டவுடன், அவர்களை அரசுப்பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றினர். கொரோனா தொற்று காலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை நடத்தாதன் காரணமாக பள்ளிகளின் செலவு வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், பெரும்பாலான பள்ளிகள் கல்விக் கட்டணத்தை குறைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு ஏழை எளிய மாணவ, மாணவியர் நலன் கருதி இதுகுறித்து மேல்முறையீடு செய்து குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி மாற்றுச் சான்றிதழில் மாணவ, மாணவியரின் கட்டண பாக்கி குறிப்பிடப்பட வேண்டும் என்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட இழுக்கை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்….

The post பள்ளி மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கி ஆணையை எதிர்த்து மேல்முறையீடு: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : O. Panneirselvam ,Supreme Coordinator ,Corona ,Dinakaraan ,
× RELATED வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட...