- வருமானவரித் துறை
- சத்யபிரதா சகு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேர்தல் அலுவலர்
- சத்யபிரத சகு
- தின மலர்
சென்னை: சென்னை – நெல்லை ரயிலில் பறக்கும் படையினர் சோதனையில் பாஜ வேட்பாளரின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தை வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
சென்னை – நெல்லை ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 6ம் தேதி ரூ.4 கோடியை 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறையினர் தான் விசாரணை செய்வார்கள். இது தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளோம். இதில் அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள்.
The post ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.