×

35 ஆண்டுகளுக்கு பின் மேனகா, வருண் காந்தி போட்டியிடாத பிலிபிட்டில் பாஜ வெற்றி பெறுமா? காங்கிரசில் இருந்து கட்சி மாறியவருக்கு சீட் தந்ததால் தொண்டர்கள் அதிருப்தி

பிலிபிட்: உபி மாநிலம் பிலிபிட் மக்களவை தொகுதியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி 6 முறை வெற்றி பெற்றுள்ளார். அவருடைய மகனான வருண் காந்தி தற்போது அந்த தொகுதியின் எம்பி ஆவார். கட்சிடிையை விமர்சித்ததால் மக்களவை தேர்தலில் வருண் காந்திக்கு பாஜ சீட் வழங்கவில்லை.

அவருக்கு பதிலாக உபி அமைச்சர் ஜிதின் பிரசாதாவுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்த ஜிதின் பிரசாதா கடந்த 2021ல் பாஜவில் சேர்ந்தார். ஷாஜகான்பூரை சேர்ந்த ஜிதினுக்கு தொகுதி மாற்றி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் பாஜ தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிலிபிட் தொகுதிக்கும் மேனகா காந்திக்கும் நீண்ட தொடர்பு உள்ளது. கடந்த 1989 முதல் அந்த தொகுதியில் அவரோ அல்லது அவரது மகனோ போட்டியிட்டுள்ளனர். 35 ஆண்டுக்கு பின் முதல்முறையாக அந்த தொகுதியில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், மேனகாவுக்கு மட்டும் சுல்தான்பூர் தொகுதியை பாஜ ஒதுக்கியுள்ளது.

இதனால் இந்த தொகுதியில் பாஜ கரை சேருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடி நாளை பிலிபிட் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் பகவத் சரண் கங்குவார் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

The post 35 ஆண்டுகளுக்கு பின் மேனகா, வருண் காந்தி போட்டியிடாத பிலிபிட்டில் பாஜ வெற்றி பெறுமா? காங்கிரசில் இருந்து கட்சி மாறியவருக்கு சீட் தந்ததால் தொண்டர்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : BJP ,Bilibit ,Maneka ,Varun Gandhi ,Congress ,Billipit ,Former Union Minister ,Maneka Gandhi ,Billipit Lok Sabha ,UP ,Lok Sabha ,Philpit ,Dinakaran ,
× RELATED உத்தவ், சரத்பவாருடன் மம்தா பானர்ஜி...