- யூனியன்
- அமைச்சர்
- புது தில்லி
- எல். என் மிஸ்ரா
- யூனியன் ரயில்
- பிராட் கேஜ் ரயில்வே
- சமஸ்திபூர் ரயில் நிலையம்
- பீகார்
- மத்திய அமைச்சர்
புதுடெல்லி: கடந்த 1975ல் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த எல்.என்.மிஸ்ரா பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் நடந்த அகல பாதை ரயில் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மேடை மீது குண்டு வீசப்பட்டதில் அவர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 40 ஆண்டுகள் கழித்து 2014 டிசம்பரில் தீர்ப்பு வழங்கிய விசாரணை நீதிமன்றம் சந்தோஷ் ஆனந்த், சுதேவ் ஆனந்த், கோபால்ஜி மற்றும் வழக்கறிஞர் ரஞ்சன் திவேதி ஆகிய 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி, ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைஎதிர்த்து 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே எல்.என்.மிஸ்ரா கொலை வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடத்த கோரி 49 ஆண்டுக்கு பின் அவரது பேரன் வைபவ் மிஸ்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மே 16ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
The post 49 ஆண்டுக்கு பிறகு ஒன்றிய அமைச்சர் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனு appeared first on Dinakaran.