×

ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதுகளை ஆதாரமாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்தது. 8.86 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ராஞ்சி நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 4 பேர் மீது அமலாக்கத்துறை அண்மையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக சில ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், சர்ச்சைக்குரிய 8.86 ஏக்கர் நிலத்தை பராமரித்து வந்த சந்தோஷ் என்பவர் வாங்கிய ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜுக்கான ரசீதுகள் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த நிலத்தின் உரிமையாளர் ராஜ்குமார் பகென் என்பது உண்மையல்ல. அவர் ஹேமந்த் சோரனின் பினாமி என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. டிவி, பிரிட்ஜ் வாங்கியது சட்ட விரோத பணபரிமாற்றத்தின் கீழ் வருமா, என்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The post ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி appeared first on Dinakaran.

Tags : ED ,Hemant Soren ,New Delhi ,TV ,Bridge ,Jharkhand ,Chief Minister ,Hemant Soran ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு மே 6-க்கு ஒத்திவைப்பு..!!