×

ஊழல், வன்முறையை விரும்பும் திரிணாமுல் கட்சி: மம்தா மீது மோடி கடும் தாக்கு

ஜல்பைகுரி: மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில்,‘‘ மேற்குவங்கத்தில் தங்கள் கட்சி தலைவர்களை பாதுகாக்க வன்முறை மற்றும் ஊழல் தடையற்ற வகையில் நடப்பதை திரிணாமுல் கட்சி விரும்புகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் சட்ட அமைப்புகளை திரிணாமுல் கட்சி அவமதிக்கிறது.

பல்வேறு சம்பவங்களில் நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் மாநில அரசு சட்டபடி மேற்கொள்ளும் வேண்டிய பணியை செய்கிறது. ஏழைகளுக்கான நல்வாழ்வு திட்டங்களை மாநில தடுத்து நிறுத்துகிறது. ஒன்றிய அரசு திட்டங்களுக்கான நிதியை மக்களுக்கு கிடைக்காமல் போகும் வேலைகளை அரசு செய்கிறது. திரிணாமுல் தலைவர்களின் ரூ.3000 கோடி சொத்துகளை ஈடி முடக்கி வைத்துள்ளது’’ என்றார்.

The post ஊழல், வன்முறையை விரும்பும் திரிணாமுல் கட்சி: மம்தா மீது மோடி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Trinamool party ,Modi ,Mamata ,Jalpaiguri ,Jalpaiguri, West Bengal ,West Bengal ,India ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!