×

பல ஆண்டுகளுக்கு பிறகு ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் வன்முறை பாதித்த பகுதிகளில் முதல்முறை வாக்குப் பதிவு: ஹெலிகாப்டர்கள் மூலம் தேர்தல் குழு பயணம்

ராஞ்சி: ஜார்க்கண்டில் மே 13,20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகம் கொண்டது சிங்பூம் மக்களவை தொகுதி. இதன் காரணமாக இந்த தொகுதியின் பல பகுதிகளில் பல ஆண்டுகளாக தேர்தலின்போது, ஒரு ஓட்டு கூட பதிவானதில்லை. இந்நிலையில் சிங்பூம் மக்களவை தொகுதியின் செரைகேலா, சாய்பாசா, மஜ்கனோன், ஜக்நாத்பூர், மனோகர்பூர், சக்ரதர்பூர் ஆகிய மாவோயிஸ்ட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்முறையாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மேற்கு சிங்பூம் துணை ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குல்தீப் சவுத்ரி அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் எந்தவொரு வாக்காளரும் விடுபட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மாவோயிஸ்ட் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடத்தும் 118 இடங்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்.

ரோபோகேரா, பின்ஞ், தல்கோபாத், ஜரைகேலா, ரோம் போன்ற மிக பதற்றமான பகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.  இந்த சாவடிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும். மேலும் இந்த சாவடிகளில் பணியில் ஈடுபடும் தேர்தல் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்படுவர். வாக்களிக்க தேவையான பொருள்களும் ஹெலிகாப்டர், ரயில் மூலம் கொண்டு செல்லப்படும்” என்று தெரிவித்தார்.

The post பல ஆண்டுகளுக்கு பிறகு ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் வன்முறை பாதித்த பகுதிகளில் முதல்முறை வாக்குப் பதிவு: ஹெலிகாப்டர்கள் மூலம் தேர்தல் குழு பயணம் appeared first on Dinakaran.

Tags : Maoist ,Jharkhand ,Ranchi ,Lok Sabha ,Singhbhum ,Maoists ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்