×

எலக்ட்ரானிக் வாக்குபதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட்

சந்திராப்பூர்: மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி மே 20ம் தேதி வரை 5 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் யவத்மால் மாவட்டத்தில் வனத்துறை ஊழியராக பணியாற்றி வரும் சிவசங்கர் மோரே என்பவர் தனது வாட்ஸ்அப்பில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் வகையில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார். இதையடுத்து சிவசங்கர் மோரேவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட கலெக்டர் வினய் கவுடா தெரிவித்தார்.

 

The post எலக்ட்ரானிக் வாக்குபதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Chandrapur ,Lok Sabha ,Maharashtra ,Election Commission ,Dinakaran ,
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...