×

பவண் கல்யாண் ரசிகரின் திருமண அழைப்பிதழில் ஜனசேனா கட்சி தேர்தல் அறிக்கை: போட்டோ இணையத்தில் வைரல்

திருமலை: பவண் கல்யான் ரசிகரின் திருமண அழைப்பிதழில் ஜனசேனா கட்சி தேர்தல் அறிக்கை அச்சிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கான தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் தெலுங்கு பவர் ஸ்டாரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிட்டாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதற்காக தேர்தல் பிரசாரத்திலும் பவன் கல்யாண் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மறுபுறம், பவன் கல்யாணுக்கு ஆதரவாக காக்கிநாடா மாவட்டம், கொத்தப்பள்ளி மண்டலம் கொண்டவரம் கிராமத்தை சேர்ந்த வீரபாபு என்ற ரசிகர், தனது திருமண அழைப்பிதழில் ஜனசேனா கட்சியின் தேர்தல் அறிக்கையை அச்சிட்டுள்ளார். அதில், வரும் தேர்தல்களில் ஜனசேனா கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது அவரது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தேர்தலின், வாராஹி விஜயபேரி யாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று அனகாபள்ளியிலும், இன்று எலமஞ்சியிலும், நாளை பிட்டாபுரத்தில் நடைபெறும் உகாதி கொண்டாட்டத்தில் பவன் கல்யாண் பங்கேற்க உள்ளார். சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தற்போது குணமடைந்து நேற்று முதல் வாராஹி யாத்திரையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பவண் கல்யாண் ரசிகரின் திருமண அழைப்பிதழில் ஜனசேனா கட்சி தேர்தல் அறிக்கை: போட்டோ இணையத்தில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Janasena party ,Bhavan ,Janasena ,Bhavan Kalyan ,AP State Legislature ,People's Elections ,
× RELATED பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு: நடிகர் சிரஞ்சீவி ரூ.5 கோடி நன்கொடை