×

10 ஆண்டில் 4.25 லட்சம் விவசாயிகள் தற்கொலை; உயிரிழப்புக்கு மோடி பொறுப்பேற்க வேண்டாமா?: செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் இன்றைக்கு விவசாயிகளின் நிலை என்ன ? தலைநகர் தில்லியில் கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளிலே உண்டு, உறங்கி போராட்டம் நடத்தி 740 பேர் உயிர் துறந்தும் விவசாய சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்த பிரதமர் மோடியை விட ஒரு கல் நெஞ்சக்காரர் வேறு எவராவது இருக்க முடியுமா ? வங்கிக் கடன் மற்றும் பயிர்ச்சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நிலைமை அதிகரித்துள்ளது.

மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி 2014 இல் இருந்து 2023 வரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இவர்களது உயிரிழப்புக்கு மோடி பொறுப்பேற்க வேண்டாமா ?

நாட்டில் மொத்தமுள்ள 14.64 கோடி விவசாயிகளில் 9.24 கோடி விவசாயிகளுக்குத் தான் பிரதமர் விவசாய நிதியுதவி திட்டம் கிடைத்திருக்கிறது. ஏறத்தாழ 5.40 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post 10 ஆண்டில் 4.25 லட்சம் விவசாயிகள் தற்கொலை; உயிரிழப்புக்கு மோடி பொறுப்பேற்க வேண்டாமா?: செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Tamil Nadu Congress Party ,Delhi ,
× RELATED பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும்...