×

ராஜஸ்தானுடன் ஆர்சிபி தோல்வி; நாங்கள் கடைசி நேரத்தில் 10 – 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்: கேப்டன் டூபிளசிஸ் பேட்டி

ஜெய்ப்பூர் : 2024 ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த 19வது லீக் போட்டியில் ஆர்சிபி அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. 67 பந்துகளில் விராட் கோலி சதத்தை எட்டிய நிலையில், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 72 பந்துகளில் 4 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 113 ரன்களை சேர்த்தார். இது விராட் கோஹ்லி தனது 8வது ஐபிஎல் சதத்தை விளாசி அசத்தினார்.

ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஜெய்ஸ்வாலை இழந்தாலும், மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லருடன், கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். முதல் ஓவரில் இருந்து கடைசி வரை களத்தில் நின்ற ஜோஸ் பட்லர் வெற்றியை உறுதி செய்த பின் சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் போட்டிக்கு பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டுபிளசிஸ் கூறியதாவது: இந்த பிட்ச் சிக்கலானதாக இருந்தது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது 190 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தேன். நாங்கள் கடைசி நேரத்தில் 10 – 15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கலாம். விராட் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடினார். விராட்டோ, கிரீனோ அல்லது தினேஷ் கார்த்திக்கோ யாரோ ஒருவர் ரன் குவித்து இருந்தால் நாங்கள் இன்னும் அதிக ஸ்கோர் சேர்த்து இருப்போம். நாங்கள் அதற்கு முயற்சி செய்தோம். ஆனால், பந்துகளை அடிப்பது சவாலாக இருந்தது. ஸ்பின்னர்கள் வீசிய பந்துகளை பேட்டின் அடிப் பகுதியால் தான் அடிக்க முடிந்தது. வேகப் பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் மட்டுமே ரன் குவிக்க முடிந்தது’’ என்றார்.

The post ராஜஸ்தானுடன் ஆர்சிபி தோல்வி; நாங்கள் கடைசி நேரத்தில் 10 – 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்: கேப்டன் டூபிளசிஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : RCB ,Rajasthan ,Du Plessis ,Jaipur ,19th league match ,IPL 2024 ,Rajasthan Royals ,Virat Kohli ,Dinakaran ,
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி...