×

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் குணசேகரன் வீட்டில் கணக்கில் வராத ரூ.3.72 லட்சம் பறிமுதல்!

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் குணசேகரன் வீட்டில் கணக்கில் வராத ரூ.3.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஓட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியுடன் பிடிபட்ட நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல இடங்களில் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

 

The post நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் குணசேகரன் வீட்டில் கணக்கில் வராத ரூ.3.72 லட்சம் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Nella ,BJP ,Nayinar Nagendran ,Gunasekaran ,Chennai ,Election Flying Force ,Lakshmi Gayatri Hotel ,Vannarapetta ,Dinakaran ,
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...