போபால்: மத்திய பிரதேசத்தில் பேருந்து – கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான நிலையில் 28 வீரர்கள் காயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் இருந்து ராணுவ வீரர்களின் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தனகாதா என்ற கிராமத்தை கடந்து சென்ற போது திடீரென பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 26 சிறப்பு ஆயுதப் படை வீரர்கள் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘காரில் டிரைவர் உட்பட 5 பேர் இருந்தனர். பலியான 3 மூன்றும் காரில் இருந்த பயணிகள் ஆவர். ராணுவ வீரர்களில் ஒருவர் பலத்த காயத்துடன் நாக்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மாண்ட்லா பட்டாலியன் ராணுவ முகாமில் இருந்து பந்துர்னா நோக்கிச் சென்று 31 வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதால் விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 28 பேர் காயமடைந்தனர். குண்டும் குழியுமான சாலையால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கார் மீது மோதியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்’ என்றனர்.
The post பேருந்து – கார் மோதி விபத்து; 3 பேர் பலி 28 வீரர்கள் காயம்: ம.பி.யில் சோகம் appeared first on Dinakaran.