பெரம்பலூர்: பெரம்பலூரில் மின் பாதையில் குறுக்கிட்ட மரக் கிளைகளைஅகற்றும் பணி மின்வாரியத்துறை மூலம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் பெரம்பலூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள மின் பாதையில் மரக் கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின் விநியோகத் தில் பிரச்சனைகள் ஏற்பட்டு அடிக்கடி மின் விநியோகம் தடைபட்டுவந்தன. இதனை சரி செய்ய பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வைப் பொறியாளர் அம்பிகா மற்றும் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் இருந்து பாலக்கரை,
வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குப் பேட்டை,பெரிய கடை வீதி வழியாக துறையூர் சாலை யில் உள்ள கல்யாண நகர், கித்துக்கடை பகுதி வரை சுமார் 3கிலோமீட்டர் நீளத் தற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள மின் பாதைகளில் குறுக்கிட்ட மரக்கிளை களை அகற்றும்பணி மின் வாரிய ஊழியர்கள் மூலம் நடைபெற்றது. இதற்காக மின் பாதைகளில் உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்படுத்திய மரக் கிளைகள் அகற்றி அப்புறப்படுத்திய பின்னர், முறையாக மின் வினியோகம் வழங்கப்பட்டது.
The post பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி appeared first on Dinakaran.