- மாவட்ட வருவாய் அலுவலர்
- சண்முகநாதன்
- மன்னார்குடி
- அரசு கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மன்னார்குடியில்அரசுக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் கொடியசைத்து துவக்கி வைத் தார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இதையடுத்து, 18 வயதுக்கு உட் பட்ட அனைவரும் 100 சதவீத அளவில் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதில் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி யில் நேற்று காலை ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரி இளைஞர் செஞ் சிலுவை சங்கம் சார்பில், 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் 100 சத வீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் கொடி யசைத்து துவக்கி வைத்தார். பேரணி முக் கிய விதிகள் வழியாக சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அரு கில் நிறைவு பெற்றது.
முன்னதாக, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தான கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முக நாதன் துவக்கி வைத்து செல்பி பாயிண்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வாக்காளர் பதிவு அலுவலர் மகேஷ் குமார், தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் ராஜேஷ் கண்ணா, இணைப் பேராசிரியர்கள் வேலாயு தம், ராஜா, இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப் பாளர் வெற்றிவேல், என்சிசி அலுவலர் லெப் ராஜன், என்எஸ்எஸ் அலுவலர்கள் பிரபாகரன், சிவக்குமார், பேராசிரியர் இல பொம்மி, உடற்கல்வி இயக்குனர் ராம் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.