×

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பழைய பேப்பர், இரும்பு கடை குடோனில் தீ

 

புதுக்கோட்டை, ஏப்.7: புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள பழைய பேப்பர் இரும்பு கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இதனால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான சந்தைப்பேட்டையில் பழைய இரும்பு கடைகள் மற்றும் வாரச் சந்தைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நகராட்சி அலுவலகம் அருகே சுரேஷ் என்பவர் பழைய பேப்பர் இரும்பு கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது குடோனில் அட்டை பெட்டிகள் பழைய பேப்பர்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது கொழுந்து விட்டு எரிய தொடங்கிய நிலையில் இது குறித்து அப்பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் மூன்று தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மேலும் தீயணைப்புத்துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தியதால் சந்தைப்பேட்டை பகுதிகளில் மேலும் உள்ள பழைய இரும்பு கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் தீ விபத்து குறித்து புதுக்கோட்டை நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பழைய பேப்பர், இரும்பு கடை குடோனில் தீ appeared first on Dinakaran.

Tags : Pudukottai market ,Pudukottai ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...