×

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

 

அரியலூர், ஏப்.7: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செம்மலை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை ஆதரித்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாமங்கலம், கொண்ட சமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, அகரபுத்தூர், கருணாகரநல்லூர், பழஞ்சநல்லூர், நாட்டார்மங்கலம், வீரானநல்லூர் குருங்குடி, கண்டமங்கலம், எய்யலூர், ஆயங்குடி, முட்டம், மோவூர் உள்ளிட்ட கிராமங்களில் முன்னாள் அமைச்சர் செம்மலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது: அதிமுக ஆட்சியில் தான் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. இதனால் ஏரி, குளங்களில் நீர்கள் தேக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அதிமுக திட்டங்களை மீண்டும் செயல்படுத்திட வேட்பாளர் சந்திரஹாசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்களித்து அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.

சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், முன்னாள் சட்டப் மன்ற உறுப்பினர் முருகுமாறன், ஒன்றியச் செயலர்கள் வாசு, முருகையன், சிவகுமார், நிர்வாகிகள் ஜான் போஸ்கோ, பாலகிருஷ்ணன், பாலச்சந்தர்,அசோகன், வனிதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

The post சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : minister ,AIADMK ,Chandra Haasan ,Chidambaram ,Ariyalur ,former ,Chemmalai ,Kattumannarkoil ,Chandrahasan ,Constituency ,Mamangalam ,Kondasamudram ,Kattumannarkovil Assembly Constituency ,ADMK ,Chidambaram Constituency ,
× RELATED விக்கிரவாண்டி தேர்தலில் நாங்களும் பணம் தரவில்லை: அமைச்சர் ரகுபதி!