×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

 

ஊத்துக்கோட்டை, ஏப். 7: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவள்ளூர் நாடாளுமன்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் நேற்று எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு வந்தார். அவருக்கு ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமையில் தாரை தப்பட்டைகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், ரெட்டி தெரு, நேரு பஜார், அண்ணாநகர் பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.

இதனையடுத்து நான்கு முனை சந்திப்பில் அண்ணாசிலை அருகில் பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கிரிராஜன், மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மாவட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Congress ,Uthukottai ,Sasikanth Senthil ,Tiruvallur Parliamentary DMK Alliance ,Ellapuram ,North Union ,
× RELATED ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில்...