உசிலம்பட்டி, ஏப். 7: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி உசிலம்பட்டி அருகே குடிப்பட்டி விலக்கு பகுதியில் துணை தாசில்தார் கருப்பையா தலைமையில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டி.ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்பரின் டூவீலரை சோதனையிட்டனர்.
அதில், உரிய ஆவணமின்றி ரூ.95 ஆயிரத்து 730 இருந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உசிலம்பட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாச்சியருமான ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே அத்திபட்டியில் கார்மென்ட்ஸ் நிறுவனம் நடத்தும், ராஜலட்சுமி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நகையை வங்கியில் அடகு வைத்து, பணத்தை எடுத்து வந்ததாக கூறினார். அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி அதிகாரிகள் கூறினர்.
The post பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.