×

மோடி பின்னால் ஒளிந்துகொள்ளாமல் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும்: ப.சிதம்பரம் விளாசல்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள பல கருத்துக்கள் பாஜ உடன்படாது. சாதிவாரி கணக்கெடுப்பை பாஜ எதிர்க்கிறது, பாமக ஆதரிக்கிறது. இதுபோன்று முரண்பட்ட கூட்டணியை நாங்கள் அமைக்கவில்லை. எங்களது கருத்துக்களும், திமுகவின் கருத்துக்களும் ஒத்துப்போகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. வரி, செஸ் வரியை சீரமைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். நீட் என்பது தேவையற்றது.

பாஜ தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஜிஎஸ்டி ஒழுங்குபடுத்தப்படும். பாஜ கொண்டு வந்த 30 முதல் 35க்கும் மேற்பட்ட சட்டங்களை மறுஆய்வு செய்வோம், சில சட்டங்களை ரத்து செய்வோம். தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும். கச்சத்தீவை யாரும், யாருக்கும் தாரை வார்க்கவில்லை, யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த உடன்பாடு முடிந்து விட்டது.

எனவே இந்த பிரச்னையை எழுப்பக்கூடாது என தகவல் உரிமைச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் மோடிதான் இருந்தார். திடீரென அண்ணாமலை கேள்வி கேட்டவுடன் 7 நாட்களில் பதில் வருகிறது. பதில் தயாரித்து விட்டு கேள்வி கேட்டுள்ளார்கள். இது ஜோடித்த கதை. நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இந்த பிரச்னையை எழுப்புவது இலங்கை தமிழர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய தீங்கு.

மீண்டும் முரண்பாட்டை, மோதலை ஏற்படுத்தி விடக்கூடாது. தமிழர்கள் என கூறும் இவர்கள் தமிழ்நாட்டில் போட்டி போட வேண்டும். மோடி பின்னால் ஒளிந்து கொண்டு இந்த பிரச்னையை எழுப்புகின்றனர். 35 லட்சம் தமிழர்களின் நலனின் மீது அக்கறையில்லை. அவர்களின் அறிக்கையை கண்டிக்கிறேன், இவ்வாறு கூறினார்.

* தினகரன் நாளிதழுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
ப.சிதம்பரம் மேலும் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியின் 2024ம் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை நியாயபத்திரா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி கூறுகிறோம். இந்த தேர்தல் அறிக்கை குறித்து தினகரன் நாளிதழில் நல்ல முறையில் மொழி பெயர்த்து விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்’’ என்றார்.

The post மோடி பின்னால் ஒளிந்துகொள்ளாமல் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும்: ப.சிதம்பரம் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Jaisankar ,Tamil Nadu ,Modi ,Chidambaram Vlasal ,Union Finance Minister ,P. ,Chidambaram, Sivaganga district ,Karaikudi ,Baja ,Congress ,Satiwari ,Bamaka ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...