×

தமிழ்நாட்டை கண்டு மோடி அமித்ஷாவுக்கு அச்சம்: திருமாவளவன் பேச்சு

சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் விசிக வேட்பாளராக போட்டியிடும் திருமாவளவன் கலந்து கொண்டு, பேசுகையில், ‘இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு தர்ம யுத்தத்தை வழிநடத்தி கொண்டிருக்கிறார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பாசிச பாஜ அரசை விரட்டுவதற்கான முதல் யூகம் வகுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். யார் ஒருங்கிணைக்க போகிறார்கள் என்ற எண்ணத்தோடும், இருமாப்போடும் இருந்த மோடி, அமித்ஷா போன்றவர்களுக்கு முன், ஒருங்கிணைக்க முடியும் என்று சாதித்து காட்டியவர் தான் முதல்வர். மோடி, அமித்ஷாவிற்கு தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்தை கண்டும் அச்சமில்லை, ஆனால் தமிழ்நாட்டை கண்டும், தமிழக முதல்வரை கண்டும் அச்சமடைந்துள்ளனர்.

கலைஞரின் அரசியல் வாரிசான முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி பாதுகாக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதுதான் நமது நோக்கம். ஜனநாயத்தை பாதுகாப்பதுதான் நமது நோக்கம் என்ற முறையில் எத்தகைய நெருக்கடி வந்தாலும் பாஜ பாசிச அரசை விரட்டியடிப்பதற்காக வியூகம் அமைத்து கொடுத்தார்,’என்றார்.

The post தமிழ்நாட்டை கண்டு மோடி அமித்ஷாவுக்கு அச்சம்: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi Amit Shah ,Tamil Nadu ,Thirumavalavan ,Chidambaram ,Chief Minister ,M. K. Stalin ,All India Party ,India Alliance ,India ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...