×

ரூ.15 கோடி தங்க நகைகள் பறிமுதல்: கருவூலத்தில் ஒப்படைப்பு

ஓசூர்: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில், நேற்று அதிகாலை பறக்கும்படை அதிகாரிகள் பெங்களூருவில் இருந்து, ஓசூர் நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 69 பெட்டிகளில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகளில், 45 பாக்ஸ்களில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டும் ஆவணங்கள் இருந்துள்ளது. ஆனால், 24 பாக்ஸ்களுக்கு ஆவணங்கள் இல்லை.

மேலும், வாகனத்தில் வந்தவர்கள் அதிகாரிகளின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அதிகாரிகள் ரூ.15 கோடி நகைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், பிரபல தனியார் தொழிற்சாலைக்கு அந்த நகைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட நகை பெட்டிகள், அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

* ரூ.5.88 கோடி தங்க நாணயங்கள் சிக்கின
காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில், கொரியர் நிறுவன பிக்கப் வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 14 அட்டை பெட்டிகளில் தங்க நாணயங்கள் இருந்தது.உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரம் என கூறப்படுகிறது.

The post ரூ.15 கோடி தங்க நகைகள் பறிமுதல்: கருவூலத்தில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Jujuwadi ,Ozur ,Bangalore ,Treasury ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதிநாளை ஒட்டி...