×

திருப்பூர் அருகே வாய்க்காலில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பரிதாப பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே வாய்க்காலில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக பலியாகினர். திருப்பூர் கொங்கு பிரதான வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் (20). இவரது உறவினர்கள் வீணா (17) மற்றும் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த பிரீத்தா (18). இருவரும் பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று முன்தினம் தாராபுரம் ரோட்டில் உள்ள வாய்க்கால் மேட்டில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

3 பேரையும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பொங்கலூர் தேவனாம்பாளையம் அருகே வாய்க்கால்மேட்டில் இரு சிறுமிகள் சடலம் மிதப்பதாக, நேற்று மதியம் அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

இறந்தவர்கள் வீணா மற்றும் பிரீத்தா என தெரிய வந்தது. அதேபகுதியில் சிறிது நேரத்தில் சந்தோஷின் சடலத்தையும் போலீசார் கைப்பற்றினர். 3 பேரும் வாய்க்காலில் குளிக்க சென்ற நிலையில், நீச்சல் தெரியாமல் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 பேரின் உடல்களும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post திருப்பூர் அருகே வாய்க்காலில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Santhosh ,Kongu Pradhan Road, Tirupur ,Veena ,Preetha ,Palavanchipalayam ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 236 மாணவ-மாணவிகள் தேர்ச்சி