×

ரஷ்யாவில் அணை உடைந்து 2 ஆயிரம் பேர் தவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் ஓரன்பர்க் மாகாணத்தில் ஓர்க்ஸ்க் நகரம் உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்த மழையால் யூரல் ஆற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அணை நிரம்பியது. இந்நிலையில் நேற்று அணையில் உடைப்பு ஏற்பட்டு ஓர்க்ஸ் நகரை வெள்ளம் சூழ்ந்தது.

2 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஓர்ஸ்க் நகரில் 2,400க்கும் அதிகமான குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

The post ரஷ்யாவில் அணை உடைந்து 2 ஆயிரம் பேர் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Orsk ,Orenburg ,Ural River ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...