×

லக்னோ – குஜராத் இன்று பலப்பரீட்சை: 3வது வெற்றி யாருக்கு?

ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ – குஜராத் மோதுகின்றன. இதுவரை 3 போட்டியில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோற்றாலும்… அடுத்த 2 ஆட்டங்களில் பஞ்சாப், பெங்களூரு அணிகளை வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது. ராகுல், டி காக், ஸ்டாய்னிஸ், பூரன், க்ருணால் ரன் குவிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர்.

பந்துவீச்சில் அசத்தும் நவீன் உல் ஹக், மயாங்க் யாதவ் அணியின் வெற்றிக்கு பங்களித்து வருகின்றனர். புதிதாக இணைந்துள்ள தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்த்தும் தன் பங்குக்கு கலக்குகிறார். அதனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணிக்கு லக்னோ சவாலாகவே இருக்கும். அதே சமயம் கில் தலைமையிலான குஜராத் அணியும் அந்த சவாலுக்கு தயாராகவே இருக்கிறது.

முன்னாள் சாம்பியன்கள் மும்பை, ஐதராபாத் அணிகளை வென்றுள்ள டைட்டன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை, பஞ்சாப் அணிகளிடம் தோல்வியைத் தழுவியது. சாஹா, கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், விஜய் சங்கர், சாய் கிஷோர், உமேஷ் யாதவ், ரஷீத்கான் ஆகியோர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலம். இரு அணிகளும் 3வது வெற்றிக்காக மல்லுக்கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

* 3வது தொடரில் விளையாடும் இந்த 2 அணிகளும் 4 ஆட்டங்களில் மோதியுள்ளதில், குஜராத் 4-0 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

* அதிகபட்சமாக குஜராத் 227, லக்னோ 171 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக குஜராத் 135, லக்னோ 82 ரன் எடுத்துள்ளன.

* கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் லக்னோ 3-2 என்ற கணக்கிலும், குஜராத் 2-3 என்ற கணக்கிலும் வெற்றி தோல்விகளை ருசித்துள்ளன.

The post லக்னோ – குஜராத் இன்று பலப்பரீட்சை: 3வது வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.

Tags : Lucknow-Gujarat ,IPL ,Lucknow- ,Gujarat ,Lucknow ,KL ,Rahul ,Rajasthan ,Punjab ,Bengaluru ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி