×
Saravana Stores

தெலங்கானா- சட்டீஸ்கர் எல்லையில் மோதல்: 3 மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக்கொன்ற போலீசார்: ஏகே-47, வெடிபொருட்கள் கண்டெடுப்பு

திருமலை: தெலங்கானா – சட்டீஸ்கர் மாநில எல்லையில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் என்கவுன்டரில் 3 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டு கொன்றனர். தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் கர்ரிகுட்டாலு மற்றும் சட்டீஸ்கர் மாவட்ட எல்லையில் காங்கேர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து மற்றும் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை போலீசார் ரோந்து சென்றபோது, போலீசார் செல்லும் பாதையில் எதிர்திசையில் மாவோயிஸ்டுகள் வந்தனர்.  அப்போது போலீசாரிடம் இருந்து தப்பித்து செல்ல மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசாரும் எதிர்த்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அந்த இடத்தில் ஏகே-47, 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே சட்டீஸ்கர் மாநிலம் பிஜாபூரில் கடந்த 1ம் தேதி நடந்த என்கவுண்டரில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post தெலங்கானா- சட்டீஸ்கர் எல்லையில் மோதல்: 3 மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக்கொன்ற போலீசார்: ஏகே-47, வெடிபொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana- Chhattisgarh border ,Maoists ,Tirumalai ,Telangana ,Chhattisgarh ,border ,Telangana State Mulugu District Karrikutalu ,Chhattisgarh District ,Kangere Forest ,Telangana-Chhattisgarh ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத உற்சவங்கள் அறிவிப்பு