×

பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு பா.ஜ வேட்பாளர்களை விரட்டியடிக்கும் விவசாயிகள்: முன்னாள் தூதருக்கு கருப்பு கொடி காட்டி திருப்பி அனுப்பினர்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் விரட்டியடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்திற்கு செல்லும் பா.ஜ வேட்பாளர்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பரித்கோட் தொகுதி பாஜ வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கடந்த ஏப்ரல் 5 அன்று விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்டார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக முன்னாள் தூதரக அதிகாரி தரன்ஜித் சிங் சந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அவர் பிரசாரத்திற்காக அஜ்னாலாவில் உள்ள ககோமஹால் கிராமத்தில் பாஜ தலைவர் அமர்பால் சிங் போனி மற்றும் கட்சி தொண்டர்களுடன்சென்று கொண்டு இருந்தார். அப்போது கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியை சேர்ந்த விவசாயிகள் பாஜவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, கருப்பு கொடி காட்டி வேட்பாளர் சந்துவை விரட்டினர். பா.ஜ தலைவர்களோ அல்லது அதன் வேட்பாளர்களோ எங்கள் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறி அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.

The post பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு பா.ஜ வேட்பாளர்களை விரட்டியடிக்கும் விவசாயிகள்: முன்னாள் தூதருக்கு கருப்பு கொடி காட்டி திருப்பி அனுப்பினர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Punjab ,Amritsar ,Union government ,Lok Sabha ,Panjab ,
× RELATED ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட...