×

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு ஏற்படுத்த தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை கட்டாயம் சைக்கிளில் ரோந்து பணி: போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு மேம்படுத்தவும், பொதுமக்களிடம் எளிதாக அணுகவும், குற்றங்களை தடுக்கவும் மாநகர காவல் துறை பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டாயம் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் 12 துணை கமிஷனர்கள் தலைமையில் அனைத்து காவல்நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை நேற்று முன்தினம் முதல் அவரவர் காவல் எல்லையில் சைக்கிள் ரோந்து பணிகள் மேற்கொண்டனர். அப்போது துணை கமிஷனர்கள் முதல் காவலர்கள் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சென்ற பொதுமக்களிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தனர். குறிப்பாக அடையார் துணை கமிஷனர் மகேந்திரன், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன், பரங்கிமலை துணை கமிஷனர் அகியோர் தலைமையில் அவரவர் காவல் மாவட்டத்தில் போலீசார் சாலைகள், தெருக்களில் கைக்கிள்கள் மூலம் சென்று ரோந்து பணிகள் மேற்கொண்டனர்….

The post காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு ஏற்படுத்த தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை கட்டாயம் சைக்கிளில் ரோந்து பணி: போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Shankar Jiwal ,Chennai ,Commissar ,Dinakaran ,
× RELATED சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்...